உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணை பகுதியில் நடமாடிய முதலை

அணை பகுதியில் நடமாடிய முதலை

பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் முதலை நடமாட்டம் உள்ளது. பெரும்பாலும் முதலைகள் நீர் தேக்கத்திலிருந்து வெளியேறுவதில்லை. இந்நிலையில் நேற்று காலை அணை மேல் பகுதி தார்ச்சாலையில், 10 அடி நீள முதலை நகராமல் படுத்திருந்தது. அப்போது மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், கண்காணிப்பு பணிக்கு சென்ற நீர்வளத்துறை ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய முதலை, மீண்டும் அணை நீருக்குள் சென்று விட்டது. பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணை மேல்பகுதியில் நடமாட, மக்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ