ஜவுளி கடைகளில் அலைமோதிய கூட்டம்
ஈரோடு: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாடை வாங்குவதற்காக, ஈரோடு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் உள்ள ஜவுளி சந்தை, ஆர்கேவி சாலை, நேதாஜி சாலை, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்-திருந்து பொருட்களை வாங்கி சென்றனர். சாலையோர கடைக-ளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.போலீஸ் பாதுகாப்புதீபாவளி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில், மாநகரின் முக்கிய இடங்களில், 14 உயர் கோபுரங்கள், 24 சிசிடிவி கேமரா மற்றும் 2 டிரோன் கேமராக்களுடன், நுாற்று-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்ச்சி முறையில் ஈடுபட்டுள்ளனர்.