உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காளைமாட்டு சிலை பகுதியில் சேதமான தானியங்கி சிக்னல்

காளைமாட்டு சிலை பகுதியில் சேதமான தானியங்கி சிக்னல்

ஈரோடு, ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில், போக்குவரத்து தானியங்கி சிக்னல் உள்ளது. கடந்த, 26ல் இப்பகுதியில் உள்ள ஒரு சாலையோர கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் கம்பம் சாய்ந்த நிலைக்கு சென்றது. அதேசமயம் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் ஒயர் தொங்கியபடி இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிவேகமாக சென்ற லாரியில், தொங்கிய ஒயர் சிக்கியுள்ளது. இதை டிரைவர் கவனிக்காமல் சென்றதால், ஒயர் இழுபட்டு தானியங்கி சிக்னல் கம்பம் சாய்ந்து, சிக்னல் யூனிட்டும் சேதமானது.இதனால் காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று தானியங்கி சிக்னல் வேலை செய்யாமல் வாகனங்கள் தாறுமாறாக சென்று வந்தன. பீக் அவர்சில் மட்டும் போக்குவரத்து போலீசார் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். சிக்னல் கம்பத்தை சேதப்படுத்திய வாகனத்தை, அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில், போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி