உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையில் சென்டர் மீடியன் கற்கள் சாய்ந்துள்ளதால் காத்திருக்கும் ஆபத்து

சாலையில் சென்டர் மீடியன் கற்கள் சாய்ந்துள்ளதால் காத்திருக்கும் ஆபத்து

சாலையில் சென்டர் மீடியன் கற்கள்சாய்ந்துள்ளதால் காத்திருக்கும் ஆபத்துகரூர், நவ. 3-கரூர், லைட்ஹவுஸ் கார்னர் சாலையில் உள்ள சென்டர் மீடியன் கற்கள் சாய்ந்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து, திருமாநிலையூர் பகுதி இடையே அமராவதி ஆற்றில் புதிய பாலத்தில் தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இங்கு, சாலை விபத்துகளை குறைப்பதற்காக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் லைட் ஹவுஸ் கார்னர் ஒட்டியுள்ள இணைப்பு சாலையில், சென்டர் மீடியன் கான்கிரீட் கற்கள் சாய்ந்துள்ளது.இந்த சாலையில் வாகனங்கள் சென்று வருவதால், விபத்து ஏற்படும் ஆபத்து காத்திருக்கிறது. குறிப்பாக, டூவிலர்கள் செல்லும் வாகன ஓட்டிகள், கற்களில் மோதி விழும் வாய்ப்பு அதிகம் உள்ளது.எனவே, விபத்துகளை தடுக்க சென்டர் மீடியனை முறையாக பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !