போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஆபத்து
கோபி: போதையில் வாகனம் ஓட்டுபவர்களால், கோபி அருகே பாரியூர் சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கோபி பாரியூர் சாலை, எந்நேரமும் வாகன நடமாட்டம் அதிக-முள்ள சாலையாக உள்ளது. அதேசமயம் விதி மீறலுக்கு பஞ்சம் இருப்பதில்லை. குறிப்பாக, போதையில் வாகனம் ஓட்டுவோர் அதிகரித்துள்ளனர். தினமும் இரவு, 10:00 மணிக்கு மேல், நள்ளி-ரவை கடந்தும், விடிய விடிய போதையில் வாகனம் ஓட்டுவோர் அதிகரித்துள்ளனர். இதனால் ஒழுங்காக வாகனம் ஓட்டுவோர், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்-பந்தப்பட்ட போக்குவரத்து பிரிவு போலீசார், பாரியூர் சாலையில் சிறப்பு கவனம் செலுத்தி, போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.