போதையில் வாகனங்கள் இயக்குவோரால் ஆபத்து
கோபி, கோபி-அத்தாணி சாலையில், போதையில் வாகனம் ஓட்டுவோரால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கோபி-அத்தாணி சாலை, எப்போதும் வாகன நடமாட்டம் அதிகமுள்ளதாக காணப்படும். அதேசமயம் வாகன விதிமீறலுக்கு பஞ்சம் இருப்பதில்லை. குறிப்பாக பைக் போன்ற வாகனங்களில் பயணிப்போர், சிலர் போதையில் தங்கள் வாகனங்களை இயக்குகின்றனர். அதேபோல் கார் போன்ற வாகனங்களில் பயணிப்போர், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய, பக்கவாட்டு கண்ணாடியை முழுவதும் ஏற்றிய நிலையில் இயக்குகின்றனர். போக்குவரத்து பிரிவு போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், அப்பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி, போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.