உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடிதம் எழுதிவிட்டு மகள் மாயம்; போலீசில் தாய் புகார்

கடிதம் எழுதிவிட்டு மகள் மாயம்; போலீசில் தாய் புகார்

மொடக்குறிச்சி, மொடக்குறிச்சி, சோலார்புதுார், ரோஜாநகர் பள்ளி வாசல் வீதியை சேர்ந்த முகமது பாசா-ரகமத் நிஷா தம்பதி மகள் அப்ரின், 17; முகமது பாசா, 15 ஆண்டுக்கு முன் மனைவியை பிரிந்து சென்றார்.ரகமத் நிஷா துணிக் கடையில் வேலை செய்கிறார். அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 முடித்து விட்டு அப்ரின் வீட்டில் இருந்தார். தோழி வீட்டு விசேஷத்துக்கு செல்வதாக கூறி கடந்த, 25ம் தேதி காலை சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் 'எனக்கு பிடித்தவருடன் செல்கிறேன். தேட வேண்டாம்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில், ரகமத் நிஷா புகார் தந்துள்ளார். அதில், தஞ்சாவூரை சேர்ந்த தனுஷ் என்பவர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார்.* ஈரோடு, அசோகபுரம், கே.கே.எஸ்.கே.மஹால் அருகே வசிக்கும் சிவசாமி மகன் நந்தகுமார், 16; கடந்த, 25ம் தேதி காலை வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. தாய் மாலா அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ