குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
ஈரோடு, டிச. 24-ஈரோடு மாநகராட்சி, 10வது வார்டு வில்லரசம்பட்டியை அடுத்த கருவில்பாறை வலசு பகுதியில், கருவில்பாறை வலசு குளம் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீரே குளத்துக்கு பிரதான நீர்வரத்தாகும். குளத்தில் ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது. அதேசமயம் ஏராளமான மீன்கள் உள்ளன. குளத்தில் மீன் பிடிக்க யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. நேற்று மாலை குளத்தில் மீன்கள் செத்து மிதக்க துவங்கின. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் சாயக்கழிவு கலந்ததால், மீன்கள் இறந்திருக்க கூடும் என்று, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.