உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க தீர்மானம்

ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க தீர்மானம்

ஈரோடு: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், ஈரோடு தெற்கு மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநில குழு உறுப்பினர் கல்-யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அமல் உன்னிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் துவக்கவுரையாற்றினார். நியூ செஞ்சுரி புத்-தக நிறுவனத்தின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், அனைத்திந்-திய இளைஞர் பெருமன்றத்தின் தேசியக்குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்புரையாற்றினர். ஈரோட்டில் புதிய உள் விளையாட்டரங்கம் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும். முழுமை பெறாத ரிங் ரோட்டை முழுமையாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, விவசாய சங்க மாநில துணைத் தலைவர் துளசிமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி