தீபாவளி உற்சாக கொண்டாட்டம்
ஈரோடு:தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர மக்கள், குடும்பத்துடன் விடியற்காலை முதலே தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குளித்து புத்தாடை அணிந்து, வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். அதை தொடர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். பலர் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர். இளைஞர்கள், இளம்பெண்கல் தியேட்டர், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று விடுமுறையை அனுபவித்தனர்.