தெருநாய்கள் கடித்து மான் பலி
சென்னிமலை: சென்னிமலை யூனியன் எக்கட்டாம் பாளையம் ஊராட்சி திருமலை நகர், சென்னிமலை மலையின் தெற்கு பகுதியில் மான்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. நேற்று காலை தண்ணீர் தேடி வந்த ஒரு ஆண் புள்ளிமானை, தெருநாய்கள் துரத்தி கடித்ததில் பலியானது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், அய்யம்பாளையம் கால்நடை உதவி மருத்துவரை வரவழைத்து உடற்கூறு பரிசோதனை செய்து புதைத்தனர்.