உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அஞ்சலகங்களில் சாப்ட்வேர் பதிவேற்றத்தில் தாமதம்; வாடிக்கையாளர் சேவை முடக்கம்

அஞ்சலகங்களில் சாப்ட்வேர் பதிவேற்றத்தில் தாமதம்; வாடிக்கையாளர் சேவை முடக்கம்

ஈரோடு, தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில், விரைவான சேவை வழங்க, ஏ.பி.டி-2.0 என்ற புதிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கடந்த, 2ம் தேதி இன்ஸ்டால் செய்தனர். இப்பணி முடிந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், அந்த சாப்ட்வேர், அஞ்சலகங்களில் உள்ள சர்வருடன், கிளைகள், தலைமை அஞ்சலகங்களை முழுமையாக இணைக்கவில்லை. இதனால் அனைத்து வகை அஞ்சல் சேவையும் பாதித்துள்ளது. ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேற்று, 150க்கும் மேற்பட்டோர் டோக்கன் பெற்று, பல்வேறு சேவைக்காக குவிந்தனர். உரிய நேரத்தில் சேவை கிடைக்காமல் விரக்தி அடைந்தனர்.இதுபற்றி, அஞ்சல் துறை அதிகாரி கூறியதாவது: புதிய சாப்ட்வேர் பதிவேற்றத்தில் பிரிண்ட் செய்வது, புதிய புத்தகம் பதிவிடுதல் போன்ற பணி நடக்கவில்லை. அதுபோல பதிவு, விரைவு தபால், பார்சல் அனுப்புதல், மணியார்டர் முழு அளவில் செயல்படுத்த முடியாததால் தாமதம் ஏற்படுகிறது. ஓரிரு நாளில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அஞ்சலக கணினி மிகவும் பழையவை. புதிய சாப்ட்வேரை ஏற்கும் திறன் இல்லை. ஓரிரு கணினியில் மட்டுமே பதிவேற்றம் முழுமை அடைந்துள்ளது. அதனால் கணினியை 'அப்கிரேடு' செய்யவும், 'மேனுவலாகவும்' சில பணிகளை செய்து வருகிறோம். இவ்வாறு கூறினார். அதேசமயம் கிளை மற்றும் கிராமப்புற அஞ்சலகங்கள் முற்றிலும் முடங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி