உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விருப்ப பணியிட மாறுதல் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

விருப்ப பணியிட மாறுதல் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு:தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சி பணியாளர்கள் சங்கத்தினர், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் நீர் வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்துணை தலைவர் கோகுல் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் யுவராஜ் முன்னிலை வகித்தார். விருப்ப பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை, நீர் வளத்துறையில், ஐந்து மாதங்களுக்கு மேல் காலிப்பணியிடங்கள் இருந்தும், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் மாறுதல் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மருத்துவ காரணம், வயது முதிர்வு, குடும்ப சூழல், குழந்தைகள் பராமரிக்கும் பெண் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, நிலுவையில் உள்ள விருப்ப பணியிட மாறுதல்களை உடன் வழங்க வலியுறுத்தினர். நிர்வாகிகள் நாகராஜ், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை