உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஈரோடு தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வட்ட கிளை செயலர் சந்திரமவுலி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலர் விஜயமனோகரன், மாவட்ட பொருளாளர் சுமதி, பொதுச் செயலர் சீனிவாசன் உட்பட பலர் பேசினர்.அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு, 25 மாதங்களாக காலதாமதப்படுத்தும் ஓய்வு கால பணப்பலன்களை உடன் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடன் துவங்கி செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் கடந்த ஆக., 18 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இருந்தும் அரசு தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது ஏற்புடையதல்ல. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என, வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ