உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூர் யூனியனில் வளர்ச்சிப்பணி துவக்கம்

நம்பியூர் யூனியனில் வளர்ச்சிப்பணி துவக்கம்

நம்பியூர்: கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு துவக்க விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பூஜை செய்து, பணி-களை தொடங்கி வைத்தார். சுண்டக்கம்பாளையம், லாகம்பா-ளையம், பொலவபாளையம், கோசணம் என நான்கு ஊராட்சி-களில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மாவட்ட கவுன்சிலர் நிதியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை, வடிகால் அமைத்தல், கான்கிரீட் சாலை, குடிநீர் இணைப்பு, குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணி நடக்கிறது. நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க., செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா தேவி, பொலவபாளையம் ஊராட்சி தலைவர் மணிகண்டமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி