கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
ஈரோடு, ஜன. 2-ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு, பெண்கள் நேற்று புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு விழா உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. பூச்சாட்டுதலும், கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அதிகாலை முதல் ஏராளமான பெண்கள், குழந்தைகள், ஆண்கள் கோவில் வந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். வரும், 8 காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. 9 காலை 7:00 மணிக்கு கம்பம் எடுத்தல், 10:00 மணிக்கு அம்மன் வீதி உலா, மஞ்சள் நீராடுதலும், 10ல் மறுபூஜை நடக்கிறது.