உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம்

மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம்

மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம்ஈரோடு, அக். 25-ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வ.சித்தையன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் மு.வரதராஜன், மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரணதிவேல், மணிவண்ணன், ராசம்மாள் உட்பட பலர் பேசினர்.நெசவு கூலியை வங்கி மூலம் வழங்குவதை கைவிட்டு, ரொக்கமாக வழங்க வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத்தை நிபந்தனையின்றி முழுமையாக வழங்க வேண்டும். கைத்தறி ஜவுளிகளுக்கு ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி நவ., 12ல் ஈரோடு கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை