மேலும் செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு துப்பாக்கி விற்பனை 'ஜோர்'
28-Oct-2024
ஈரோடு, நவ. 1-ஈரோட்டில் நேற்று, தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பொதுமக்கள் அதிகாலையிலே எழுந்து, உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மொபைல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தீபாவளி வாழ்துகளை பரிமாறி கொண்டனர்.அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள், ஒருவொருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு இனிப்பு, காரம் வழங்கி பரிமாறி கொண்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும், நேதாஜி தினசரி காய்கறி வியாபாரிகள், மார்க்கெட் முன்புறம் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
28-Oct-2024