உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்ஈரோடு, டிச. 10-வரும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க.,வில் அனைத்து நிலைகளிலும் களப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும் தொகுதி பார்வையாளர் நியமிக்கப்பட்டு, தேர்தல் ஆயத்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு, மேட்டுக்கடையில், ஈரோடு மேற்கு தொகுதி பாக முகவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மேற்கு தொகுதி பார்வையாளர் மீனா ஜெயகுமார் பேசினர். மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மேயர் நாகரத்தினம், குமாரசாமி, ராமசந்திரன், வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ