உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரே பதிவு எண்ணில் இரு கார்கள் தி.மு.க., ஒன்றிய செயலாளர் புகார்

ஒரே பதிவு எண்ணில் இரு கார்கள் தி.மு.க., ஒன்றிய செயலாளர் புகார்

காங்கேயம், காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளராக இருப்பவர் சிவானந்தன். இவர் திருப்பூர் எஸ்.பி.,க்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: எனது மொபைல்போனுக்கு சில நாட்களுக்கு முன் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் எனது கார், எலியார்பதி டோல்கேட் வழியாக சென்றதாகவும், 90 ரூபாய் பற்று வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்னுடைய கார் அங்கு செல்லவே இல்லை. இதையடுத்து பணம் பற்று வைக்கப்பட்ட டோல்கேட் எண்ணில் புகார் தெரிவித்தேன். விபரம் கேட்டபோது டோல்கேட்டை கடந்து சென்ற எனது காரின் போட்டோ கிடைத்தது. என்னுடைய காரின் பதிவெண்ணே அதற்கும் உள்ளது. எனது பதிவெண்ணை தவறாக பயன்படுத்துவது தெரிகிறது. எலியார்பதி டோல்பிளசாவில் தகவலை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை