உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., சார்பில் ரேக்ளா பந்தயம்

தி.மு.க., சார்பில் ரேக்ளா பந்தயம்

காங்கேயம், வெள்ளகோவில் ஒன்றியம் மற்றும் நகர தி.மு.க., சார்பில், ரெட்டிவலசு, வள்ளியரச்சல் ரோடு பகுதியில் ரேக்ளா பந்தயம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சக்திகுமார் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார். போட்டியில், 200 மீட்டர் துாரத்துக்கான பிரிவில், 241 வண்டிகளும், 300 மீட்டர் துாரத்துக்கான பிரிவில், 75 வண்டிகளும் பங்கேற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் முருகானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை