தார் டிரம்மில் குட்டிகளுடன் சிக்கிய நாய் உயிருடன் மீட்பு
கோபி: கோபி அருகே குள்ளம்பாளையம், ஆசிரியர் நகர் குடியிருப்பு பகுதியில், தார் டிரம்மில், குட்டிகளுடன், தெருநாய் சிக்கியுள்ளதாக, கோபி தீயணைப்பு நிலையத்துக்கு, நேற்று காலை, 8:40 மணிக்கு தகவல் கிடைத்தது. கோபி தீயணைப்பு துறையினர் விரைந்தனர். கடப்பாறை மற்றும் ரம்பம் கொண்டு, தகர டிரம்மை வெட்டி எடுத்தனர். பிறகு தாரில் சிக்கியிருந்த, தாய் நாய் மற்றும் மூன்று குட்டிகளை, ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். பின் கால்நடை மருத்துவ குழுவினர், நாய் மற்றும் குட்டிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.