உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் காளை சிலை அமைக்க ரூ.7 லட்சம் நன்கொடை வழங்கல்

காங்கேயம் காளை சிலை அமைக்க ரூ.7 லட்சம் நன்கொடை வழங்கல்

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் இன காளைகளின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், காங்கேயம் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில், காளைகளுக்கு சிலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், காளை சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.காளை சிலை அமைப்பதற்கு தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலர் சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலர் கருணைபிரகாஷ், நகர செயலர் சேமலையப்பன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலா, ரூ.1 லட்சம் நன்கொடையாக அமைச்சர் சாமிநாதனிடம் வழங்கினர். இதுவரை தி.மு.க., நிர்வாகிகள், ரூ.7 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !