உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கொங்கு கலையரங்கில் 20ல் திரவுபதி மேடை நாடகம்

ஈரோடு கொங்கு கலையரங்கில் 20ல் திரவுபதி மேடை நாடகம்

ஈரோடு, பிரபல நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் மகள் தாரிணி கோமல் நடத்தி வரும், கோமல் தியேட்டர் குழு, 15 ஆண்டுகளாக பல்வேறு நாடகங்களை மேடையேற்றி வருகிறது. சென்னையில் அரங்கேற்றப்பட்டு இந்தியா மட்டுமின்றி துபாய், மஸ்கட், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் பலத்த வரவேற்பு பெற்ற, திரவுபதி மேடை நாடகம், வரும், ௨0ம் தேதி ஈரோடு கொங்கு கலையரங்கில் மாலை, ௬:௩௦ மணிக்கு நடக்கிறது. பாரதியாரின் வாரிசான ராஜ்குமார் பாரதி, நாடகத்துக்கு இசை அமைக்கிறார். வசனங்கள் கவிஞர் சதீஷ்குமார். பாஞ்சாலியின் சபதத்தின் பின்னணி, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு தெரியாத நிலையில், இதன் பல கோணங்களை ஒரு பெண்ணின் போராட்டத்தை விரிவாகக் காட்ட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகிறது. அதுவே திரவுபதி கதையாக உருவாக தொடங்கியது என்கிறார் கதையை எழுதி இயக்கும் தாரிணி கோமல். பிரம்மாண்ட எல்.ஈ.டி., பின்னணியில், நடனம், கத்திச்சாண்டை காட்சிகளுடன், கை தேர்ந்த மேடை நடிகர்களின் நடிப்பில், 130 நிமிடங்கள் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !