உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரியிலிருந்து கீழே விழுந்த டிரைவர் பலி

லாரியிலிருந்து கீழே விழுந்த டிரைவர் பலி

பெருந்துறை, கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் ராஜாமணி, 35; லாரி டிரைவர். கேரளாவில் இருந்து இஞ்சி ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் சென்ற லாரியில், கூடுதல் டிரைவராக ராஜாமணி சென்றார். லோடு இறக்கி விட்டு பெருந்துறை சிப்காட்டுக்கு மாட்டு தீவனம் லோடு ஏற்ற நேற்று முன்தினம் வந்தார். லாரி மீதேறி தார்ப்பாய் சரியாக மூடியுள்ளதா என்று பார்த்தபோது, தலை சுற்றல் ஏற்பட்டு ராஜாமணி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்தவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை