உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளத்தில் பாய்ந்த லாரி உயிர் தப்பிய டிரைவர்

பள்ளத்தில் பாய்ந்த லாரி உயிர் தப்பிய டிரைவர்

அந்தியூர்,கர்நாடக மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு, தென்னை மட்டை ஏற்றிய ஒரு லாரி புறப்பட்டது. திண்டுக்கல், தெத்துப்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 25, ஓட்டி வந்தார். பொள்ளாச்சி சீனிவாசபுரம் கோகுல்நாத், 31, உதவியாளராக வந்தார். பர்கூர் மலையை கடந்து வரட்டுப்பள்ளம் அணை 'வியூ' பாயிண்ட் அருகே நேற்று அதிகாலை, ௫:௦௦ மணிக்கு வந்தபோது, பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து, 60 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். பர்கூர் போலீசார் லாரியை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி