உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் டிரோன் போட்டி கல்லுாரி மாணவர் அசத்தல்

ஈரோட்டில் டிரோன் போட்டி கல்லுாரி மாணவர் அசத்தல்

ஈரோடு:ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில், டிரோன் மற்றும் ரோபோடிக்ஸ் பயன்பாடு குறித்த, கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இதில், 10-க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் தங்களின் டிரோன் மற்றும் ரோபோக்களுடன் பங்கேற்றனர். பல்வேறு தடைகளை கடந்து செல்வது மற்றும் எடைகளை சுமந்து செல்வது ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த டிரோன்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கல்லுாரி தாளாளர் சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா, முதல்வர் ஜெயராமன், சென்னை கருடா ஏர் ஸ்பேஸ் அதிகாரி பொற்செல்வி, இ.சி.இ., துறைத் தலைவர் நிஷா அஞ்சலின் மற்றும் பேராசிரியர் அஸ்வத் ஆகியோர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை