உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை பொருட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

போதை பொருட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஐ.டி.ஐ.,யில், மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. ஐ.டி.ஐ., முதல்வர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்த கருத்தரங்கில், போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.கலால் பிரிவு தாசில்தார் ஜெகஜோதி, 'போதைப்பொருள் உபயோகத்தால் வாழ்க்கை சீரழிவது' குறித்து விளக்கினார். இது தொடர்பாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி