டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ஈரோடு, ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்த சண்முகம், பணியிட மாற்றம் செய்யபட்டார். இந்நிலையில், சத்தியமங்கலம் அதிரடி படை டி.எஸ்.பி.,யாக இருந்த சுகுமார், மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்று கொண்டார். வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல் போன்றவற்றை கண்டுபிடிக்க சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்படும் என டி.எஸ்.பி., சுகுமார் தெரிவித்தார்.