உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தகுதியான மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கணும்

தகுதியான மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கணும்

ஈரோடு; கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்குவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி, தலைமை வகித்து பேசியதாவது:மாணவர்களுக்கான கல்வி கடன் என்பது கட-னல்ல; எதிர் காலத்துக்கான முதலீடு. பொருளா-தார காரணத்தால் அவர்கள் படிக்க இயலவில்லை என்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க உதவுங்கள். கல்வித்தகுதி உடைய மாணவன், உயர் கல்வி படிப்பது தடைபடக்கூடாது. கல்லுாரிகளில் இருந்து வந்துள்ள பிரதிநிதிகள், கல்விக்கடன் திட்டம் குறித்து வழிகாட்ட வேண்டும். கல்விக்-கடன் பெற இணைய தளத்தில் 'வித்யாலட்சுமி தளம்' (பிஎம்-வித்யாலட்சுமி) மூலம் விண்ணப்-பிக்க பயிற்சி வழங்குங்கள். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை