மேலும் செய்திகள்
இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை
20-Jun-2025
கோபி, கோபி அருகே காசிபாளையம் பஸ் ஸ்டாப்பில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர், நேற்று காலை, 8:30 மணிக்கு, பிரதான சத்தி சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார்.கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கடத்துார் போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அழகர், 60, என்பது தெரிந்தது. விபத்தை ஏற்படுத்திய கோபி அருகே சிங்கிரிபாளையம் ஆனந்தன், 20, மீது, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20-Jun-2025