விபத்தில் முதியவர் சாவு
பெருந்துறைபெருந்துறை, குன்னத்துார் ரோட்டை சேர்ந்த விவசாயி தாயுமானவர், 70; விஜயமங்கலம் அருகிலுள்ள தனது தோட்டத்துக்கு டி.வி.எஸ்., மொபட்டில் கடந்த, 19ம் தேதி சென்று விட்டு திரும்பினார். பெருந்துறை அடுத்த பள்ளகாட்டூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.