உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி மூதாட்டி சாவு

ரயில் மோதி மூதாட்டி சாவு

ஈரோடு, ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷன்-காவேரி இடையே உள்ள, தண்டவாள பகுதியில் மூதாட்டி ஒருவர் ரயில் மோதி இறந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.ஈரோடு ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., அல்லிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று, இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டி ரோஸ் நிற நைட்டி அணிந்திருந்தார். அவருக்கு, 60 வயது இருக்கும். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.மூதாட்டி உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி