மேலும் செய்திகள்
கரித்துகள் வெளியேறிய சாய ஆலையில் ஆய்வு
05-Feb-2025
ஈரோடு: சுத்திகரிப்பு செய்யாமல், கழிவுகளை ஓடையில் வெளியேற்றிய, இரு ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஈரோடு, வைராபாளையம் பகுதியில் துணிகளை டையிங், பிளீச்சிங் செய்ய, தேவையான கெமிக்கல்களை விற்பனை செய்யும் ஆலை செயல்படுகிறது. இங்கு கெமிக்கல் கேன்களை கழுவியும், பிற ஆலை பயன்பாட்டு பொருட்களை சுத்திகரிக்-காமல், பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் வெளியேற்றி வந்தனர்.அதுபோல, அதே பகுதியில் உள்ள பிளீச்சிங் ஆலை சுத்திகரிப்பு செய்யும் யூனிட் இல்லாமல் செயல்பட்டு, கழிவு நீரை ஓடையில் வெளியேற்றி வந்தது. இதுபற்றி, அப்பகுதி பொதுமக்கள் முறையீடு செய்தனர். இதைய-டுத்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்-கொண்டு, இரு ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்தனர்.
05-Feb-2025