உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எலக்ட்ரீஷியன் ஷாக் முடிவு

எலக்ட்ரீஷியன் ஷாக் முடிவு

ஈரோடு, ஈரோடு, பழையபாளையம், சுத்தானந்தன் நகர், அம்பிகை நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 22, எலக்ட்ரீசியன். இவர் மனைவி கவிஸ்ரீ, 20; மகள் மற்றும் மருமகனை ஆடி மாத பண்டிகைக்கு அழைக்க, கவிஸ்ரீயின் தாய், கடந்த, 24ம் தேதி இரவு வந்து அழைத்துள்ளார். மாமியார் சென்ற பின் மனைவியை விக்னேஸ்வரன் திட்டியுள்ளார். இதனால் மறுநாள் காலை, தன் தந்தையை வரவழைத்து வீட்டுக்கு வெளியில் நின்று கவிஸ்ரீ பேசியுள்ளார். இதற்கும் விக்னேஸ்வரன் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் வீட்டுக்குள் மின்விசிறியில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி