பெண்ணிடம் தகாத பேச்சு எலக்ட்ரீஷியனுக்கு ஷாக்
காங்கேயம், காங்கேயம், பங்களாபுதுாரை சேர்ந்த விஜயகுமார் மனைவி சந்திரிகா, 43; ஈரோடு நகர ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர். சில ஆண்டுகளுக்கு முன், தாராபுரம் ரோடு, கொங்கு நகரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஈஸ்வரன், 50, என்பவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.பணத்தை திரும்ப கேட்டபோது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் சந்திரிகா புகாரளித்தார். இது தொடர்பாக விசாரிக்க, காங்கேயம் ஸ்டேஷனுக்கு இருவரையும் போலீசார் அழைத்துள்ளனர். இதையறிந்த ஈஸ்வரன், சந்திரிகாவை தகாத வார்த்தை பேசியுள்ளார். இதுகுறித்து சந்திரிகா புகாரின்படி, ஈஸ்வரனை போலீசார் கைது செய்து, காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.