உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்சாரம் தாக்கி மக்னா யானை பலி

மின்சாரம் தாக்கி மக்னா யானை பலி

சத்தியமங்கலம்: -சத்தியமங்கலம் வனத்துறையினர் நேற்று காலை கே.என்.,பாளையம் அருகேயுள்ள பெரும்பள்ளம் அணை பகுதியில் ரோந்து சென்றனர். வாழை மடுவு பீட் பகுதியில் ஒரு யானை இறந்து கிடந்தது. அவர்கள் தகவலின்படி சென்ற சத்தியமங்கலம் வனத்துறையினர், புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம், யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்து போனது, 25 வயதான மக்னா யானை என்பதும், மின்சாரம் தாக்கியும் பலியானது தெரிந்தது. விவசாயி பெரியமுத்தான் விவசாய நிலத்தில் மின் வேலியில் மின்சாரம் தாக்கி பலியானதாக தெரிகிறது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ