உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்டியுடன் யானை நடமாட்டம்; வனத்துறையினர் அறிவுறுத்தல்

குட்டியுடன் யானை நடமாட்டம்; வனத்துறையினர் அறிவுறுத்தல்

சத்தியமங்கலம் : கடம்பூர் செல்லும் மலைப்பாதையில், குட்டியுடன் யானை நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.ஈரோடு மாவட்டம், கடம்பூர் வனச்சரக பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி சாலையை கடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. நேற்று கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் குட்டியுடன் யானை சாலையில் நடமாடியது. பின்னர் சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினர். யானை பள்ளத்தில் இறங்கி சென்ற பிறகு வாகனங்களை எடுத்து சென்றனர். வனவிலங்குகள் எந்த நேரத்திலும் சாலையை கடந்து செல்லலாம்; வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது; வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி