உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்டியுடன் யானை நடமாட்டம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

குட்டியுடன் யானை நடமாட்டம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சத்தியமங்கலம்: ஆசனுார் வனச்சரக பகுதியில், யானைகள் அதிகமாக உள்ளது. இரை தேடி ஆசனுார் செல்லும் சாலையிலும், சாலையோரமும் திரிவது அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது: தற்போது வன விலங்குகள், குறிப்பாக யானைகள் தண்ணீர், தீவனம் தேடி சாலையை கடந்து செல்வது அதிகமாக உள்ளது. இவற்றை கண்டால் வாகன ஓட்டிகள் அதிக சத்தம் எழுப்ப கூடாது. போட்டோ, வீடியோ எடுக்க கூடாது. குட்டியுடன் இருக்கும் யானை ஆக்ரோஷமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி