மேலும் செய்திகள்
பட்டாபிராம் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
28-Aug-2024
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் என இரு பாலருக்கும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வழங்கப்படும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.இந்த மாவட்டத்தில், தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தில், ரங்கம்பாளையம் டாக்டர் ஆர்.ஏ.என்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும், 21 காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது. முகாமில் ஆண், பெண்கள் பங்-கேற்று பயன் பெறலாம். 'தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் தளம், பூ மாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு - 638011, போன்: 94440 94274' என்ற முகவரியில் கூடுதல் தகவல் பெறலாம்.
28-Aug-2024