உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வாசுகி வீதி, நாச்சியப்பா வீதி, அகில் மேடு வீதிகளில், ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பஸ்கள், இந்த வீதிகள் வழியாக தான் செல்கின்றன. இந்த பகுதிகளில் செயல்படும் டூவீலர் விற்பனை கடை, பழுது பார்க்கும் கடைகள், டீக்கடைகள், ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை கடைகள், சாலையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்திருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அவகாசமும் கொடுத்தோம். அதன் பிறகும் அகற்றாததால், கடைகளின் முன்பும், சாக்கடையை ஆக்கிரமித்தும் போடப்பட்ட ஆக்கிரமிப்பு கான்கிரீட்டுகளை இடித்து அகற்றினோம். இதேபோல், 300க்கும் மேற்ப்பட்ட கடைகளில் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு, தட்டிகளை அப்புறப்படுத்தினோம். மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்றியுள்ளோம். மாநகரில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற ஆணையர் உத்தரவிட்டுள்ளதால், வரும் நாட்களிலும் இப்பணி தொடரும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை