உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயிர் சாகுபடிக்கு தேவையான அளவு உரம் இருப்பு உள்ளது

பயிர் சாகுபடிக்கு தேவையான அளவு உரம் இருப்பு உள்ளது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பயிர் சாகுபடிக்கு தேவை-யான அளவு உரங்கள் இருப்பில் உள்ளதாக, ஈரோடு வேளாண் இணை இயக்குனர் வெங்க-டேசன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் தற்போது நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காசோளம், எள், காய்கறி, வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகி-றது. விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, தற்போது யூரியா உரம்-5,573 டன், டி.ஏ.பி., - 2,237 டன், பொட்டாஷ்-2,656 டன், காம்ப்ளக்ஸ்-7,212 டன், சூப்பர் பாஸ்பேட்-1,272 டன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், வழங்கப்-படும் திரவ உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். ஈரோடு, திண்டலில் உள்ள வேளாண் துறை மண் பரிசோதனை நிலையம் மூலம், மண் பரிசோதனை செய்து, அங்கு பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை இட்டு, பயன் பெறலாம். உரச்செலவை குறைத்து, மண் வளத்தை காக்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை