குமரன் சிலைக்கு இ.பி.எஸ்., மரியாதை
சென்னிமலை: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், கட்சி நிர்வாகி இல்ல திரு-மண விழாவில் பங்கேற்க, அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., சென்னிமலை வழியாக நேற்று காலை சென்றார். அவருக்கு சென்னிமலை குமரன் சதுக்கத்தில் ஒன்றிய, நகர நிர்வா-கிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதை ஏற்-றுக்கொண்டவர், தியாகி கொடிகாத்த குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு கட்சி கொடி ஏற்-றினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி., வேலுமணி, ஆனந்தன், சென்-னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செய-லாளர் ரமேஷ் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டனர்.