மேலும் செய்திகள்
ஓய்வூதியர்கள் போராட்டம்
22-Jul-2026
ஈரோடு:ஈரோடு பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கம், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் இணைந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3வது ஊதிய மாற்றத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒய்வூதிய மாற்றத்தையும், ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.
22-Jul-2026