கேன்சரை உற்பத்தி செய்யும் ஈரோடு மாவட்டம் கொ.ம.தே.க., ஈஸ்வரன் வருத்தம்
ஈரோடு: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார். ஈரோடு - திண்டல் சாலை யில் மேம்பாலம் அமைக்கும் திட்-டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். ஈரோடு - நசியனூர் செல்லும் சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். மானிய மின்சார இணைப்பில் இயங்கும் விசைத்தறி கூடங்க-ளுக்கு சொத்துவரி மற்றும் தொழில்வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா-னங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நிருபர்களிடம் ஈஸ்வரன் கூறியதாவது: மாநகராட்சி சாய கழிவுநீர் மற்றும் மாநகராட்சி கழிவுநீர் காவி-ரியில் கலக்கிறது. இதனால் ஈரோடு மாவட்டம் கேன்சரை உற்-பத்தி செய்யும் மாவட்டமாக உள்ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். ஆதவ் அர்ஜூனா செயலால், வி.சி.க., இரண்டாக போய்விடாமல், திருமாவளவன் பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டணியில் பங்கு என்ற விஜயின் அறிவிப்பு பற்றி விவாதம் செய்வது தவறு. இந்த அறிவிப்பு ஒருவேளை ஆதவ் அர்ஜூனா, விஜய்க்கு சொல்லி கொடுத்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.