உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்; பாதுகாப்பு பணியில் போலீசார்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்; பாதுகாப்பு பணியில் போலீசார்

ஈரோடு: இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, 160 பட்டாலியன் போலீசார் ஈரோடு வந்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை (17ல்) நிறைவு பெறுகிறது. தி.மு.க., ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டது. நாம் தமிழர் கட்சியினர், 17க்கு பின் பிரசாரத்தை துவக்குவர் என தெரிகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 20ம் தேதி. அதன் பின்னரே சுயேட்சைகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவர். இந்நிலையில் தேர்தல் பிரசாரம், வேட்புமனு தாக்கலின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,' கோவை மாவட்டம், கோவை புதுாரில் இருந்து 160 பட்டாலியன் போலீசார் ஈரோடு வந்துள்ளனர். குமலன் குட்டை, சூரம்பட்டி வலசு பகுதிகளில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் இவர்கள், பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தி கொள்ளப்படுவர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை