உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு ஈ.வெ.ரா., மண் அல்ல; சீமான் பேச்சு

ஈரோடு ஈ.வெ.ரா., மண் அல்ல; சீமான் பேச்சு

ஈரோடு: ''ஈரோடு ஈ.வெ.ரா., மண் அல்ல; தீரன் சின்னமலை, கொடிகாத்த குமரன் மண்,'' என்று, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் பேசினார்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியை அறிமுகம் செய்து நேற்றி-ரவு பேசியதாவது:தமிழர்கள் காட்டுமிராண்டிகள், முட்டாள்களின் பாஷை, சனியன், தமிழ் படித்தால் பிழைக்க முடியாது என்று சொன்னவர்களை ஒழிக்காமல் தமிழை எப்படி வளர்ப்பது. இது ஈ.வெ.ரா., மண் என்று சொல்பவர்களுக்கு இது ஈ.வெ.ரா., மண் இல்லை. எங்களுக்கு ஈ.வெ.ரா., ஒரு மண் தான். ஈ.வெ.ரா., சமத்துவம், சம உரிமை ஒன்றும் இல்லை. எதற்கு எடுத்தாலும் ஈ.வெ.ரா., என்று கூறுகின்றனர். தீரன் சின்னமலை, கொடிகாத்த குமரன், பொன்னர் சங்கரின் மண். காலிங்கராயனின் வாரிசுகள் நாங்கள். தமிழ் மொழியை, தமிழர்கள் குறித்து பேசி ஈ.வெ.ரா., எழுதியது எந்த மொழியில்? தமிழகத்தில் ஒரு கன்-னடர் அமர்ந்து கொண்டு தமிழ் மக்களை, தமிழை அவதுாறாக பேசியவர் ஈ.வெ.ராமசாமி. தமிழ் மொழியில் என்ன இருக்கிறது என்று கேட்கும் போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு அனைத்தும் இருக்கி-றதா?தமிழை பழித்த ஈ.வெ.ரா., எப்படி தமிழினத்தின் தலைவர் ஆனார். இந்த செயலுக்கு பெயர் தான் பிக்காலி தனம். சுத்த பைத்தியக்காரன் என்று எங்கள் ஊரில் சொல்-வார்கள்.ஈ.வெ.ரா.,வை பேசுபவர்கள். ஈ.வெ.ரா., பேசியதை பேசுவார்களா? ஈ.வெ.ரா., பற்றி பேசுபவர்கள் ஈ.வெ.ரா., படத்தை கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே. காந்தி படத்தை கொடுத்து தான் ஓட்டு கேட்கிறார்கள். காந்தி படம் இல்லை என்றால் மக்கள் உங்கள் மீது எடுத்துவிடுவார்கள் வாந்தி. உங்கள் தலைவர் ஈ.வெ.ரா., அல்ல. காந்தி தான். 1971 மாநாட்டில் மனைவிக்கு மற்றொரு ஆணுடன் விருப்பம் ஏற்-பட்டால் வாழலாம், குற்றமாக கருதக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். வாரிசு இல்லை என்றால் எதற்காக ஈ.வெ.ரா., சொத்து சேர்த்தார். வரும், 2026ல் தி.மு.க., வெற்றி பெற்றால் கருணாநிதி நாடாக தமிழகத்தை மாற்றி விடுவார்கள். கருணாநிதி படம் இல்லாத இடம் டாஸ்மாக்கும், கழிப்பிடமும் தான். சொந்த கட்சியிலேயே மீண்டும் தி.மு.க.,வினரை இணைத்து கொண்டுள்ளனர். இவ்வாறு பேசினார்.சீமான் மீது 2 வழக்கு பதிவு ஈரோட்டில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மரப்பாலம் நால்ரோடு பகுதியில் உரிய அனுமதி பெறாமல், நடத்தை விதி மீறியதாக சீமான் உள்ளிட்ட ஏழு பேர் மீதும், மண்டபம் வீதி ஜங்ஷன் பகுதியில் விதி மீறியதாக சீமான் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதேபோல் உரிய அனுமதி பெறாமல், காளை மாட்டு சிலையில் கட்சி கொடி, பேனர்கள், ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்ததாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட, 37 பேர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !