உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புடலை சாகுபடியில் ஈரோடு விவசாயிகள்

புடலை சாகுபடியில் ஈரோடு விவசாயிகள்

ஈரோடு:ஈரோட்டில் நீரற்ற சூழலை பயன்படுத்தி, புடலங்காய் சாகுபடியை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். ஈரோடு சுண்ணாம்பு ஓடை, ஆர்.என்.புதுார், மாயபுரம் பகுதிகளில் காவிரி கரையோரத்தில் புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வெப்ப மண்டலத்தில் எளிதாக விளையும் என்பதால், விரும்பி சாகுபடி செய்கின்றனர். கோ 1, கோ 2, பி.கே.எம்.1, எம்.டி.யூ 1, பி.எல்.ஆர் 1,பி.எஸ்.எஸ். 694, மைக்கோ குட்டை ரகங்களை பயிரிட்டுள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு, 20 முதல் 25 டன் வரை மகசூல் பெறலாம். அதிக நீர் தேவைப்படாது என்பதால் தற்போதைய சூழலை சாதமாக பயன்படுத்தி, புடலங்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை