ஈரோடு இந்து கல்வி நிலையம் 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல்
ஈரோடு, ஈரோடு இந்து கல்வி நிலையம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் சிறந்த இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.பள்ளி மாணவி அனிஷ்னா, 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தார். மாணவர் சபரிநாத், 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடம், ஆசிப் அஹமது, 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்றனர்.ஈரோடு இந்து கல்வி நிலைய தாளாளர் பாலுசாமி, பொருளாளர் அருண்குமார் ஆகியோர், சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர். பள்ளி இயக்குனர் சிவப்பிரகாசம் ராமன், நிர்வாக இயக்குனர் வினோலா சிவபிரகாசம், முதல்வர் விவேகானந்தன் ஆகியோரும் மாணவர்களை பாராட்டினர். ஈரோடு இந்து கல்வி நிலையத்தில், 10ம் வகுப்பு தேர்வில், 490 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் விடுதி கட்டணத்தில், ௧௦௦ சதவீத உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பல்வேறு வகையான கல்வி உதவித்தொகை திட்டங்கள் இருப்பதாகவும் பொருளாளர் அருண்குமார் அறிவித்தார். மாணவர் சேர்க்கை தொடர்பாக, 82207-43999 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.