மேலும் செய்திகள்
சாரதா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
09-May-2025
ஈரோடு, ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வெஎழுதிய, 388 மாணவ, -மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று தனசஞ்சய், ரஞ்சித், யாழினி, குரு விதுன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். தமிழ்செல்வம், 590 பெற்று இரண்டாமிடம், 589 பெற்று அனுசுயா மூன்றாமிடம் பிடித்தனர். கணினி அறிவியல் பாடத்தில் 34 பேரும், கணிதத்தில் 10 பேரும், கணினி பயன்பாட்டில் 9 பேரும், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியலில் தலா 8 பேரும், பொருளியல் பாடத்தில் 3 பேரும், இயற்பியல், வேதியல், வணிக கணிதம் பாடத்தில் தலா ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 19 பேரும், ஆங்கிலத்தில் இருவரும், 99 மதிப்பெண் எடுத்துள்ளனர். சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.இதில் பள்ளி தலைவர் சின்னசாமி, தாளாளர் செல்வராஜ் ஆகியோர் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, -மாணவியரை பாராட்டி கேடயம் வழங்கினர். நிகழ்வில் பள்ளி பொருளாளர் குணசேகரன், உதவி தலைவர்கள் சோமசுந்தரம், தெய்வசிகாமணி, இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், இணை பொருளாளர் நாகராஜன், பள்ளி முதல்வர் நதியா, பள்ளி செயற்குழு உறுப்பினர் சர்வலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
09-May-2025